‘கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு’... ‘மருத்து கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்’... ‘சீனாவில் நோயாளிகளிடம் பரிசோதிக்க திட்டம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Feb 06, 2020 02:57 PM

கொரோனா வைரஸ் தாக்குதல் சிகிச்சைக்கான மருந்தை சீனாவில் மனிதர்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Gilead\'s Antiviral drug Remdesivir begins trials in China

சமீபத்தில் சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் படலம் உலக நாடுகளை அலற செய்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சீனா சுகாதரா அமைப்பு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

இதில் அமெரிக்காவை சேர்ந்த கிலீட் (Gilead Sciences) என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு  Remdesivir (GS-5734) என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மருந்தை விலங்குகளிடம் சோதனை செய்து வெற்றி கொண்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலால், நிமோனியா காய்ச்சலில் இருந்த அமெரிக்காவை சேர்ந்த 35 நபரிடம் ஏற்கனவே இந்த மருந்தை சோதித்துப் பார்த்ததாகவும், தற்போது அவர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இந்த தடுப்பு மருந்தை சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 761 பேருக்கு சோதனை முறையில் இன்று முதல் பரிசோதனை செய்து பார்க்க உள்ளனர். அதற்கு அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய சுகாதரா ஆணையம் இணைந்து நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளன. மருந்தின் தன்மை குறித்து, மருத்துவப் பரிசோதனைக்கு பிறகான முடிவுகளில் இருந்து தான் தெரிந்து கொள்ள முடியும் என்று சீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags : #CORONAVIRUS #CHINA #GILEAD SCIENCES #REMDESIVIR