‘அதிரடி கிளப்பிய எடப்பாடியார்..!’ அடுத்த நடவடிக்கை என்ன..? ‘அதிர்ந்து போயிருக்கும் அரசியல் வட்டாரம்..!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 08, 2019 03:08 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டனை நேற்று திடீரென நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu CM drops IT Minister M Manikandan from state cabinet

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்த மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்ப துறையையும் சேர்த்து கவனிப்பார் எனவும் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மணிகண்டன் தன்னை எதற்காக பணிநீக்கம் செய்தார்கள் எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சமீபத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்ததாலேயே மணிகண்டன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #TAMILNADUASSEMBLY #CM #EDAPPADI #PALANISAMY #IT #MINISTER #MANIKANDAN