'அச்சுறுத்தும்' கொரோனா... 'நோயாளிகள்' தான் பர்ஸ்ட்... சொந்த திருமணத்தில் 'டாக்டர்' மாப்பிள்ளை செய்த தியாகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Feb 06, 2020 02:22 PM

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே மெல்ல பரவி வருகிறது. இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதற்காக சீனாவை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் அரசுடன் இணைந்து தீவிரமாக போராடி வருகின்றனர்.

Chinese Doctor spend only 10 minutes for his own wedding

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த மருத்துவர் தன்னுடைய சொந்த திருமணத்திற்காக சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. சீனாவின் ஷான்டாங் மாகாணம் ஹெஜி நகரைச்சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கடந்த 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

மணமகனின் பெற்றோர் உட்பட மொத்தம் 5 பேரே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் திருமணம் முடிந்த கையோடு ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு, மாப்பிள்ளை மீண்டும் மருத்துவமனை திரும்பி விட்டார். இந்த தகவலறிந்த பலரும் அவரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.

இதுகுறித்து மணமகள் கூறுகையில், ''எனது கணவர் திருமணத்திற்கு 10 நிமிடம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதனால் எனக்கு வருத்தமில்லை நாங்கள் இதை முன்னரே திட்டமிட்டுவிட்டோம். கொரோனாவிற்கு எதிராகப் போராட வேண்டியதே தற்போது முக்கியம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் திருமணம் குறித்த ஆயிரம் கனவுகள் இருக்கும் என்றாலும், சேவைக்கு முக்கியத்துவம் அளித்து மருத்துவர் செய்த இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #CORONAVIRUS