‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 21, 2019 03:35 PM

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி இந்திய பெண்ணான ஷாமிய அர்சூவை திருமணம் செய்துள்ளார்.

Pakistan fast bowler Hasan Ali married Indian girl Shamia Arzoo

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஷாமிய அர்சூ இங்கிலாந்தில் பொறியியல் படிப்பை முடித்த இவர் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் நேற்று துபாயில் விமர்சையாக நடைபெற்றது. ஜாஹிர் அபாஸ், மொஷின் கான், சோகிப் மாலிக் உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது ஹாசன் அலியும் இந்திய பெண்ணை மணமுடித்துள்ளார்.

ஹாசன் அலி இதுவரை 53 ஒருநாள் போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோகிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹாசன் அலி-ஷாமிய அர்சூ திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #PCB #CRICKET #HASANALI #INDIANGIRL #SHAMIAARZOO #PAKISTAN