'விமானத்தில் வந்த 24 சூட்கேஸ்கள்'... 'சோதனை செய்ய திறந்தபோது காத்திருந்த ஷாக்'... அதிர்ந்துபோன விமானநிலைய அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனி விமானத்தில் வந்த சூட்கேஸ்களை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிரேசிலில் இருக்கும் Fortaleza சர்வதேச விமானநிலையத்தில், கடந்த புதன் கிழமை காலை மத்திய காவல்துறையினர், தனியார் விமானம் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் விமானத்தின் உள்ளே நுழைந்த போலீசார் அங்கிருக்கும் சூட்கேஸை திறக்கச் சொல்கிறார்கள்.
அதன் பின் கத்தியால் துண்டித்து உடைத்துப் பார்த்த போது, உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் ஒன்று இருந்தது. அதன் பின்னர் நடந்த சோதனையில் அது கோக்கைன் எனத் தெரிய வந்தது. அதை ஆய்வுக்கான பரிசோதனையில் ஈடுபடுத்திய போது, அது A வகை போதைப் பொருள் என்பது உறுதியானது. மொத்தம் இது போன்று விமானத்திலிருந்த 24 சூட்கேஸ்களில், சுமார் 1304 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு சூட்கேஸிலும் ஒரு பணக் கட்டு போன்று கட்டுக் கட்டாக சுமார் 50 பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளது. இந்த விமானமானது குடியேற்ற நடைமுறைகளுக்காக Fortaleza-வில் இருக்கும் சர்வதேச விமானத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது நடந்த அதிரடி சோதனையில் தான் போதைப் பொருள் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கிடையே விமானம் Fortaleza சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியதும், உடனடியாக Leite Lopes விமானநிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.
இது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த விமானத்திலிருந்த சூட்கேஸ்கள் அனைத்து தன்னுடையது என்று அந்த பயணி கூறியுள்ளார். அது குறித்து விளக்கம் கேட்ட போது, பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. இதையடுத்து நடந்த சோதனையில் மொத்த போதைப் பொருளும் சிக்கியுள்ளது.