‘வீட்டுக்குள் இருந்த சுரங்கப்பாதை’!.. 3 பெரிய பெட்டியில் ‘வெள்ளிக்கட்டி’.. டாக்டரை அதிரவைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுரங்கப்பாதை தோண்டி மருத்துவர் ஒருவரின் வீட்டில் இருந்த வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்வபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைசாலி நகரில் டாக்டர் சுனித் சோனி என்பவரது பங்களா உள்ளது. இவர் கடந்த புதன்கிழமை (24.02.2021) காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தனது வீட்டுக்கு அருகிலுள்ள ப்ளாட்டில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து தனது வீட்டில் வைத்திருந்த 400 கிலோ வெள்ளிக்கட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டர் சுனித் சோனியின் வீட்டுக்கு அருகில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பில் மர்ம நபர்கள் சிலர் ப்ளாட் வாங்கியுள்ளனர். பின்னர், கிட்டத்தட்ட 3 மாதங்களாக சுரங்கப்பாதை தோண்டி, அது நேராக டாக்டர் சுனித் சோனியின் வீட்டுக்கு செல்லும் வகையில் அமைத்துள்ளனர். சுனித் சோனி சுமார் 400 கிலோ வெள்ளிக் கட்டிகளை 3 பெரிய பெட்டிகளில் வைத்து, வீட்டுக்குள் 6 அடி ஆழத்தில் புதைத்து வைத்திருந்துள்ளார்.
மர்ம நபர்கள் அமைத்த சுரங்கப்பாதை சரியாக சுனித் சோனி வைத்திருந்த வெள்ளிப் பெட்டிகள் இருக்கும் இடம் வரை வந்துள்ளது. அதனால் சுனித் சோனியின் வீட்டில் வெள்ளிக்கட்டிகள் இருப்பது நன்கு அறிந்த நபர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் மர்ம நபர்கள் வாங்கிய ப்ளாட்டில், அந்த இடத்தின் உரிமையாளர் திடீரென வீடு கட்ட ஆரம்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நகைக்கடைக்கு அருகே ரூ.28,000 வாடகைக்கு பழக்கடை வைத்து சிலர் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நிலையில் சுரங்கப்பாதை அமைத்து வீட்டில் வைத்திருந்த வெள்ளிக்கட்டிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
