VIDEO: '21 வருட கனவு!.. சாதித்துக் காட்டிய ஸ்ரீஜேஷ்'!.. டிவியில் பார்த்து ஆனந்த கண்ணீர்மல்க கொண்டாடிய குடும்பம்!.. தந்தை - மகன் பாசப் போராட்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்ற தருணத்தை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் குடும்பம் கண்ணீர்மல்க கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில், இந்தியாவுக்காக களத்தில் இறங்கி 11 வீரர்கள் போராடி வெற்றியை வசமாக்கினர். எனினும், இந்த வெற்றியின் முக்கிய காரணம் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆவார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவரானாலும் ஹாக்கியில் தமிழ்நாட்டு அணிக்காக தேசிய போட்டிகளில் பிஆர் ஸ்ரீஜேஷ் ஆடி இருக்கிறார். இவர் தமிழ்நாடு ஹாக்கி கழகத்தின் பதிவு செய்யப்பட்ட வீரர். அதிகாரபூர்வமாக இவர் தமிழ்நாட்டு வீரர். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில்தான் இவரின் ஹாக்கி புதிய உயரம் தொட்டது. இந்திய அணிக்கு இவர் தேர்வாக சென்னையில் மேற்கொண்ட பயிற்சிகள் காரணமாக இருந்தது.
சென்னையில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி, ஹாக்கி அணியில் ஆடி அதன் மூலம் தேசிய அளவில் பிஆர் ஸ்ரீஜேஷ் கவனிக்கப்பட்டார். இதன் காரணமாகவே இப்போதும் இவர் தமிழ்நாட்டு வீரராக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில் தான், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கடைசி 6 நொடிகளில் ஜெர்மணிக்கு கிடைத்த பெனால்டி ஷாட்டை வெற்றிகரமாக முறியடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரீஜேஷ் வித்திட்டார். இதனை, கேரளாவில் இருந்து டிவி மூலம் பார்த்த ஸ்ரீஜேஷின் குடும்பத்தார் உற்சாகத்தில் துள்ளி குதித்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். அப்போது ஸ்ரீஜேஷின் தந்தை உணர்ச்சிப் பெருக்கால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஸ்ரீஜேஷ், "இந்த பதக்கம் என்னுடைய தந்தைக்கானது. அவர் தான் என்னுடைய ஹீரோ. அவரால் தான் நான் இங்கு இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
This medal is for you my achaaan ( father )
My hero, he is why I’m here pic.twitter.com/1OdO5eZwaw
— sreejesh p r (@16Sreejesh) August 5, 2021
முன்னதாக, "தமிழ்நாடுதான் எனக்கு நிறைய அடையாளங்களை கொடுத்தது. தேசிய போட்டிகளில் ஆட வேண்டும் என்றால் எப்போதும் தமிழ்நாட்டிற்காக மட்டுமே ஆடுவேன்" என்று பிஆர் ஸ்ரீஜேஷ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.