யாரும் 'அந்த மாதிரி' மெஷின்ல பணம் எடுக்காதீங்க...! 'இப்போதைக்கு பாதுகாப்பு இல்ல...' - எஸ்.பி.ஐ நிர்வாகம் தடை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெபாசிட் இயந்திரங்கள் மூலம் பணம் கொள்ளை போவதால் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் பணம் எடுக்க எஸ்.பி.ஐ தடைவிதித்துள்ளது.

ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் பொதுவாக பணம் போடவும், எடுக்கவும் இயலும். இந்நிலையில் வடமாநில கும்பல் ஒன்று, ஸ்டேட் பேங்க் டெபாசிட் இயந்திரங்களில் இருக்கும் சென்சாரை குழப்பி பல லட்சக்கணக்கில் பணம் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்த கொள்ளை கும்பல், ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-மின் டெபாசிட் இயந்திரத்தை மட்டுமே குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதால் அதில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவம் சென்னைப் பகுதிகளான வளசரவாக்கம், தரமணி, வேளச்சேரி, விருகம்பாக்கம், வடபழனி, பெரியமேடு, கீழ்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்-மில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் கொள்ளையர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் எனவும், இந்த கும்பல் ஹரியானா தப்பி சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு, டெபாசிட் இயந்திரத்தில் பணம் வெளியே வந்த பின் சென்சாரில் கையை வைத்து மறைத்துவிட்டால் 20 நொடியில் அந்த பணம் அதே வங்கி கணக்குக்கே திரும்பி விடுமாம்.
இதனை பயன்படுத்திய கொள்ளையர்கள் எஸ்.பி.ஐ பல்வேறு ஏடிஎம் மையங்களில் கைவரிசை காண்பித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்
