இந்தியா முழுவதும் ஒரே 'கைவரிசை ஃபார்முலா'!.. ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில்... வங்கிக் கணக்குகளை முடக்கிய போலீசார்!.. திடுக்கிடும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கி ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து 19ம் தேதிக்குள்ளாக எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு அரியானாவில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 4 வெளி மாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இதில் நான்காவதாக கைது செய்யப்பட்ட வங்கி கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் இருந்து பல்வேறு தகவல்கள் பெறுவதற்காக 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்களும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் வரை வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதையொட்டி, வங்கி ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் சென்னை போலீசார் 30 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.
பல இடங்களில் ஏ.டி.எம்-இல் இருந்து கொள்ளையடித்த பணத்தை உடனடியாக அவர்களது வங்கி கணக்கிலேயே ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தி டெபாசிட் செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு மற்ற மாநிலங்களிலும் இதே பாணியில் கொள்ளை நடந்துள்ளது.
தற்போது முதல் முறையாக இந்தியாவிலேயே இந்த வெளி மாநில கொள்ளை கும்பலை சென்னை போலீசார் தான் கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
