அர்த்த ராத்திரியில்... ஒருவர் பின் ஒருவராக... வீடுகளுக்குள் திபுதிபுவென புகுந்த மர்ம நபர்கள்!.. கடப்பாறையை எடுத்து... பகீர் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் அடுத்தடுத்து 7 வீடுகளுக்குள் புகுந்து கடப்பாறை கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராம் விலாஸ் என்ற குடியிருப்பில் உள்ள வீடுகளில் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் வீட்டில் வசிப்பவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து தரை தளத்தில் பீரோவில் இருந்த பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
லாட்ஜ் உரிமையாளர், ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. மேலாளர், மென்பொருள் பொறியாளர் ஆகியோர் உட்பட 7 பேரின் வீடுகளில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையடுத்து, தகவல் அறிந்த மதுக்கரை போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் போலீசார், அதில் பதிவாகியுள்ள மூன்று பேரை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
