‘காத்துக்காக கதவை திறந்து வச்சிட்டு தூங்கிய குடும்பம்’!.. காலையில் எழுந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ‘ஷாக்’ சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிவர் வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த ஐய்யப்பன்தாங்கல், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). கொத்தனாராக வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
அப்போது வெக்கையாக இருந்ததால், வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் தூங்கியுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை மணிகண்டன் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்துள்ளார்.
பூரோவுக்குள் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோயுள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியவர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
