ரொம்ப சீப் ரேட் மேடம்...! 'வண்டியில இருக்கு...' 'காசு கொடுங்க, போய் எடுத்திட்டு வரேன்...' - வெளிய போனவர் 'டக்குனு' செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடையாறு காந்தி நகர் பகுதியில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சரிஜா (35) என்ற பெண்மணி பணிபுரிந்து வருகிறார். அந்த பழக்கடைக்கு பழம் வாங்குவதுபோல் வந்த மர்ம நபர் ஒருவர் சரிஜாவிடம் பேச்சு கொடுத்து பேசிக்கொண்டுள்ளார்.
அதோடு தான் கணினி விற்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருவதாகவும், மிகவும் குறைந்த விலையில் கணினி வாங்கி தருவதாக கூறியுள்ளார். அரசு விலையில்லா லேப்டாப்பை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
அந்த மர்ம நபர் சொல்லியதை நம்பிய சரிஜாவோ கணினி வாங்க அவரிடம் சுமார் 10,000 ரூபாயை கொடுத்து ள்ளார். கணினி வண்டியில் இருப்பதாக கூறிய அந்த மர்மநபர் கணினியை கொண்டு வருவதாக கூறி வெளியே வந்து ஒரே ஓட்டமாக தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சரிஜா உடனடியாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழக்கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த சிசிடிவி வீடியோவில் இருந்த நபர் வடமாநிலத்தவர்போல் இருந்ததால், போலீசார் கவனத்தை திசை திருப்பி திருடும் வடமாநிலத்தவரின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டபோது அடையாளம் கிடைக்கவில்லை.
அதன்பின் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த நபரை தீவிரமாக தேடியபோது, அடையாறு பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் சிசிடிவியில் பதிவான அதே நபர் என்பது தெரியவந்தது. காசு வாங்கி ஓடிய அந்த நபர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சரவணன் (40) என்பதும், அவர் ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஆக்டிங் ஓட்டுனராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
