‘விருந்துக்கு போய்விட்டு வந்தபோது நேர்ந்த சோகம்’... 'புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 17, 2019 10:08 PM

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bike accident near trichy newly married man and his friend died

லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்குதெருவைச் சேர்ந்தவர் 27 வயதான மோகன்.  இவருக்கும், முள்ளிக்கருப்பூர் கிராமத்தை சேர்ந்த ரமணி என்ற பெண்ணிற்கும் கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் திருமணம் ஆனது. இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு முள்ளிக்கருப்பூர் கிராமத்தில், பெண்ணின் மாமா வீட்டிற்கு விருந்திற்கு போய்விட்டு திரும்பினர். அப்போது புதுமண தம்பதிகள் இருவர், மற்றும் மோகனின் நண்பர் ரஞ்சித் ஆகியோர் ஒரு பைக்கில் லால்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

வாளாடி சிவன்கோயில் அருகே வந்துக் கொண்டிருந்தபோது, அரியலூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த இவர்களின் பைக் மீது மோதியது. இதில் 3 பேருமே நிலைதடுமாறி கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் லாரியிலும் மோதி, மோகன், ரஞ்சித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ரமணி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை கைதுசெய்தனர். திருமணமான 2 நாளிலேயே மாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #TRICHY