"கள்ளக்காதல் மட்டும் பண்ற?".. கணவரைப் பிரிந்த பெண்ணுக்கு காதலன் கொடுத்த கொடூர தண்டனை!.. சடலத்தை மீட்கும்போது காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்த திலகவதி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில்தான் தான் வசித்து வந்த அதே பகுதியில் கறிக்கடை நடத்திவந்த பத்மநாபன் என்கிற தனது சிறுவயது நண்பருடன் மீண்டும் பழகி வந்தார் திலகவதி. இம்முறை இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியதோடு பத்மநாபன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி திலகவதியை வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தயக்கம் காட்டி வந்த திலகவதி மீது சந்தேகம் கொண்ட பத்மநாபன் சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இதனிடையே திலகவதி மாயமானதாக கூறி அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் திலகவதியை தேடி வந்த நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தகரக்கொட்டாய் என்கிற இடத்திற்கு சென்றனர்.
அங்கு திலகவதியை சுத்தியலால் அடித்துக் கொன்று பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பத்மநாபனின் சடலத்தையும், பத்மநாபனால் கொலை செய்யப்பட்ட திலகவதியின் சடலத்தையும் போலீசார் மீட்டனர்.

மற்ற செய்திகள்
