'பிளிறியபடி ஓடிவந்து 2 பெண்களை தாக்கும் காட்டு யானை!'.. 'அலறிய பெண்கள்!'.. 'பதறிபடி வீடியோ எடுத்த பக்கத்து வீட்டார்!'.. நடுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 29, 2020 11:32 PM

கோவை மாவட்டம் சாமிசெட்டிப்பாளையத்தில் காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் வந்து இரண்டு பெண்களை தாக்கிய காட்சியை அண்டைவீட்டார் பதறியபடி வீடியோ எடுத்துள்ளனர்.‌

neighbours captures video of Elephant attacking 2 women in coimbatore

கோவை மாவட்டம் சாமிசெட்டிபாளையத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், அங்கிருந்த ஒரு வீட்டின் தோட்டம் போன்ற பகுதிக்குள் தனது குட்டி யானையுடன் புகுந்த பெரிய காட்டு யானை தன்னிடம் அகப்பட்டுக் கொண்ட இரண்டு பெண்களை தாக்கும் காட்சியை அண்டை வீட்டார் பதறியபடி வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் யானையிடம் அகப்பட்டுக்கொண்ட இரண்டு பெண்கள் அலறுவது, அதை வீடியோ எடுத்தபடி யானை தங்களையும் தாக்கி விடுமோ என்கிற அச்சத்தில, “கணேசா போய்விடு.. கணேசன் போய்விடு” என்று வீடியோ எடுத்தபடி அண்டை வீட்டார் பதறுவதும் பதிவாகியுள்ளது.‌