'என்னடாப்பா வயசு உனக்கு'... '3 மாவட்ட செக் போஸ்ட்'... 'வித்அவுட் லைசென்ஸ்'... '9ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை'... அதிரவைத்த பிளஸ் ஒன் மாணவன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்9-ம் வகுப்பு மாணவியைக் கடத்திக் கொண்டு சென்று, பாட்டி வீட்டில் வைத்து பிளஸ் ஒன் மாணவன் செய்த கொடுமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவனுக்கும், அதே பள்ளியில் 9- வகுப்பு படித்து வந்த ,மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. படிக்கும் வயதில் படிப்பை மறந்த இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இருவரும் சந்தித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார்கள்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த 2 பேரும் திடீரென மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் இருவரையும் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பயந்து போன மாணவியின் பெற்றோர் மகள் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியைத் தேடி வந்தனர்.
அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியுடன் பள்ளியில் படித்து வந்த 11.ம் வகுப்பு மாணவன் தான், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கரூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வைத்து இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கரூருக்கு விரைந்த காவல்துறையினர், மாணவரின் பாட்டி வீட்டிலிருந்த மாணவியை மீட்டனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மாணவியிடம் நடைபெற்ற விசாரணையில், கடத்தி சென்ற மாணவர் பாட்டி வீட்டில் வைத்து அந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியைக் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த மாணவரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அந்த மாணவரைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
வாகனங்களில் வெளியூருக்குச் செல்பவர்கள் இ-பாஸ் வைத்து இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சோதனை சாவடிகளைக் கடந்து, ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், இ-பாஸ் இல்லாமலும், பிளஸ் ஒன் மாணவன், மாணவியை அழைத்துச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
