'அவசர' அவசரமாக 'ஊருக்குள்' வந்த 'மாப்பிள்ளை'!.. 'தாலி' கட்டப்போற 'கொஞ்ச' நேரத்துக்கு முன் தெரியவந்த 'ஷாக்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லியிலிருந்து சாலை மார்க்கமாக தமிழகம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிரிவினரில் ஒரு பிரிவினர் திண்டுக்கல் செல்ல, திருமணம் செய்வதற்காக மணமகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட இன்னொரு பிரிவினர் பொள்ளாச்சி வந்துள்ளனர்.
இதனிடையே திண்டுக்கல் வந்த சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட, அவர்களுடன் தொடர்பில் இருந்த இன்னொரு பிரிவினரின் பட்டியலை சேகரித்தபோது பொள்ளாச்சி சென்றவர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மணமகன் உட்பட 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதனால் எல்லைப் பகுதியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், எப்படி அவர்களை பரிசோதிக்காமல் ஊருக்கு உள்ளே நுழைய விட்டார்கள் என தெரியவில்லை என்றும் உயர் அதிகாரிகள் ஒருபுறம் குழம்பியுள்ளனர். இதனிடையே மணமகனுக்கு கொரோனா உறுதியானதால் அவருடைய திருமணம் எப்போது நடக்கும் என்பது தெரியாமல், தள்ளிப்போயுள்ளதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.