‘நம்பி வந்த மனைவிக்கு..’ சாலையிலேயே நடந்த பயங்கரம்.. கணவரின் செயலால்.. ‘அச்சத்தில் உறைந்து போன தெரு மக்கள்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 12, 2019 10:27 PM
ஆந்திராவில் பட்டப்பகலில் மனைவியின் தலையை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த மணி கிராந்தி என்பருக்கு பிரதீப் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியிடமிருந்து பிரதீப் விவாகரத்து கோரியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டுக்கு வந்த பிரதீப் அவரிடம் பேச வேண்டுமெனக் கூறியுள்ளார். இதை நம்பி பிரதீப்பிடம் பேச வந்தபோது மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர் மணி கிராந்தியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணி கிராந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் வெட்டிய தலையுடன் பிரதீப் தெருவில் நடந்து சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மணி கிராந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
