புருஷன்-பொண்டாட்டி சண்டை.. 'தடுக்க' சென்ற நபரை.. 'கடித்து' குதறிய கணவன்.. மருத்துவமனையில் சிகிச்சை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 23, 2019 06:17 PM

கணவன்-மனைவி சண்டையை தடுக்க சென்ற நபரை கணவன் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

man bites neighbor person, now he admitted hospital

நாகை மாவட்டம் தரங்கஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்(35) கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகே செந்தில்(32)- பாக்கியலட்சுமி என்னும் திருமணமான தம்பதியர் வசித்து வந்தனர். திருமணம் முடிந்து ஓராண்டாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். வழக்கம்போல நேற்றும் செந்தில் குடித்துவிட்டு வந்து பாக்யலட்சுமியுடன் சண்டை போட்டுள்ளார்.

இதைப்பார்த்த மாதவன் அவர்களின் சண்டையை தடுக்க சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில், மாதவனை கடித்து குதறி கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த செந்திலை அக்கம்-பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

குடும்ப சண்டையை தடுக்க சென்ற நபரை கணவன் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனிமே புருஷன்-பொண்டாட்டி சண்டை போட்டா பக்கத்துல போவீங்க?

Tags : #HOSPITAL #FIGHT