'டெஸ்ட்' தொடரின் பாதியிலேயே.. 'அடுத்த' தோனியை 'வீட்டுக்கு' அனுப்பிய பிசிசிஐ.. என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 23, 2019 05:45 PM

இந்திய அணியின் அடுத்த தோனியாக உருவாக்கப்பட்டு வரும் இளம்வீரர் ரிஷப் பண்டை பிசிசிஐ வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

Rishabh Pant asked to play in Syed Mushtaq Ali Trophy

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட் திடீரென நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மாற்றாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இளம் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இடம் பிடிப்பார். ஆனால் தற்போது அவரின் பார்ம் சரியில்லை என்பதால் அதற்கு முன்பாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆடவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனால் தான் ரிஷப் பண்டை டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அணியில் இருந்து நீக்கி இருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். இதேபோல இளம்வீரர் ஷுப்மன் கில்லும் டெஸ்ட் தொடரின் பாதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சையது முஷ்டாக் அலி டி20 ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும் ஆடவுள்ளனர்.