கஞ்சா புகைத்ததை போலிஸாரிடம் கூறிய நபரை கொடூரமாக தாக்கிய இருவர்..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 22, 2019 01:38 PM

சென்னையில் கஞ்சா புகைத்தை போலிஸாரிடம் கூறிய நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man beaten in Chennai caught on CCTV

சென்னை பூக்கடை பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் அருகில் முகமது சுல்தான் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் எச்சில் துப்பியுள்ளனர். அது முகமது சுல்தானின் பேண்ட்டில் பட்டுள்ளது. ஆட்டோவின் உள்ளே எட்டிப் பார்த்த போது இருவர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் முகமது சுல்தான் அருகில் இருந்த போக்குவரத்து காவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அங்கு சென்ற போக்குவரத்து காவலர் கஞ்சா புகைத்தவர்களை எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் முகமது சுல்தானை சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது சாலையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து தன்னை தாக்கியவர்கள் குறித்து முகமது சுல்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்கியவர்களை கண்டுபிடித்து அவர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகமது சுல்தானை தாக்கியவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராபர்ட் மற்றும் அவரது நண்பர் தீனா என்பது தெரியவந்துள்ளது.

Tags : #CCTV #CHENNAI #MAN #ATTACKED