‘சாலையைக் கடக்கும்போது கார் மோதி தூக்கிவீசப்பட்ட நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 17, 2019 06:10 PM

இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two wheeler and Car accident in Vellore caught on CCTV camera

வேலூர் மாவட்டம்  ஆம்பூரில் உள்ள சான்றோர்குப்பத்தில் ஜெயராஜ் என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஜெயராஜ் இருசக்கர வாகனத்தில் கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது சாலையில் கார் ஒன்று வேகமாக வருவதை கவனிக்காமல் ஜெயராஜ் கடந்துள்ளார். சாலையின் நடுவில் சென்றபோது வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஜெயராஜ் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஆம்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஜெயராஜ் சாலையைக் கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கார் மோதி பலியான சம்பவம் அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #CCTV #TWO WHEELER #CAR #ACCIDENT