‘மின்னல் தாக்கியதில்..’ ஒரே நாளில் 32 பேர் பலியான சோகம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jul 22, 2019 12:47 PM

உத்தர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

Lightning strikes kill 32 in Uttar Pradesh in one day

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் கான்பூர் மற்றும் ஃபதேபூரில் தலா 7 பேரும், ஜான்சியில் 5 பேரும், ஜலாவுனில் 4 பேரும், ஹமீர்பூரில் 3 பேரும், காஜிபூரில் 2 பேரும், ஜான்பூர், பிரதாப்கர், கான்பூர் தேஹாத், சித்ராகூட் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக சனிக்கிழமை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : #LIGHTNING #UTTARPRADESH #CM #YOGIADITYANATH #33DEAD