'ஒருமுறை பார்லருக்கு வாங்களேன்!'.. நம்பி போன தொழிலதிபர்.. அடித்து உதைத்து, வங்கி ஆப் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 11, 2019 08:23 PM

புதுவை திருமுடி சேதுராமன் நகரைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபர் மஞ்சுநாத். வெளி மாநிலங்களில் இருந்து கெமிக்கல் பொருட்களை வரவழைத்து வியாபாரம் செய்து வருகிறார். இதனிடையே, முதலியார் பேட்டை ஜோதி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பியூட்டி மற்றும் மசாஜ் பார்லர் நடத்தி வந்த உதயகுமார் என்பவருடன் அறிமுகமாயிருக்கிறார். அவரோ தனது பியூட்டி மற்றும் மசாஜ் பார்லரை பார்ப்பதற்கு ஒருமுறை வருமாறு மஞ்சுநாத்தை அழைத்துள்ளார்.

man assaulted by 2 men and lost 5 lakh to cheaters

அதற்கென அவர் கூறியபடி முதலியார் பேட்டையில் உள்ள ஒரு இடத்துக்கு சென்ற பதம்நாபனை, உதயகுமார் ஜோதி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டில் அப்போது இருந்த இன்னொரு நபருடன் சேர்ந்து உதயகுமார் திடீரென கதவைப் பூட்டி மஞ்சுநாத்தின் செல்போனை பறித்துக் கொண்டார்.  மேலும் மஞ்சுநாத்தின் செல்போனில் இருந்த ஆப் மூலம், அவரது வங்கி விபரங்களை பார்த்துள்ளனர். அதில் அவரது கரூர் வைஸ்யா வங்கியில் 60 லட்சம் ரூபாய் வரை பணம் இருந்ததை பார்த்த இருவரும், தங்களது கணக்கில் அந்த பணத்தை மாற்றித்தருமாறு பிரம்பாலேயே ரத்தம் வரும் அளவுக்கு அடித்து உதைத்துள்ளனர்.

அதன் பிறகு உதயகுமார் மற்றும் அவரது நண்பர்களின் வங்கிக் கணக்கிற்கு இருவரும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மஞ்சுநாத் கணக்கில் இருந்து மாற்றிக்கொண்டுவிட்டு, மஞ்சுநாத்தை வெளியில் விட்டனர். வீட்டுக்கு வந்துவிட்ட மஞ்சுநாத்தை அவரது மகன்கள் மருத்துவமனையில் சேர்த்ததோடு, உதயகுமார் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : #PUDUCHERRY