பைபாஸ் சாலை.. நள்ளிரவு நேரம்.. தனியாக நின்று லிஃப்ட் கேட்ட பெண்.. காரை நிறுத்தியதும் அரண்டு போன ஓட்டுநர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில், இரவு நேரத்தில் நிறைய வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகிறது.

அப்படி சில வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் நின்று கொண்டு, அங்கே வந்த வாகனங்களில் லிப்ட் கேட்ட படி நின்றுள்ளார்.
அப்போது, முதலில் காரில் தனியாக வந்த ஒருவர், அந்த பெண்ணை பார்த்துள்ளார். பின்னர், அச்சத்தில் நிறுத்தாமல் முன்னேறி செல்லவே, அவர் பின்னால் வந்த காரில் தனியாக வந்த நபர், பெண் லிப்ட் கேட்டதும் வண்டியை நிறுத்தியுள்ளார்.
லிப்ட் கேட்ட பெண்..
பெண்ணிற்கு உதவி செய்யும் நோக்கில், காரை நிறுத்தி அந்த பெண்ணை உள்ளே ஏற்றிய அந்த நபர், எங்கே போக வேண்டும் என்பது பற்றி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில், திடீரென இருட்டில் மறைந்து நின்ற சுமார் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஓடி வந்து திடீரென காருக்குள் ஏறி உள்ளது. மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, அந்த ஓட்டுனரை மிரட்டவும் ஆரம்பித்துள்ளனர். அவரிடம் இருந்து சுமார் 2,000 ரூபாய் பணம் உள்ளிட்ட சில பொருட்களை அவர்கள் திருடவும் செய்துள்ளனர்.
பதறி ஓடிய மர்ம கும்பல்
ஆரம்பத்தில், லிப்ட் கொடுக்காமல் முன்னேறிச் சென்ற வாகன ஓட்டி, பின்னால் ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்ந்த நிலையில், சந்தேகத்தின் பெயரில் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் அங்கே வருவதை பார்த்த மர்ம கும்பல், அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. முதலில் லிப்ட் கேட்ட பெண் மட்டும் தனியாக சிக்கிக் கொள்ள, அவரிடம் ரோந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோயம்பேடு பகுதியை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண்ணை வைத்து, மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் இரவு நேரத்தில் தனியாக வாகனம் ஒட்டி வரும் வாகனத்தை குறி வைத்து, மர்ம கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றும், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, மக்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
Also Read | 43 சவரன் நகைகளை குப்பையில் வீசிய பெண்.. அதிர வைத்த சிசிடிவி காட்சி.. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்

மற்ற செய்திகள்
