1969'ல பள்ளி மாணவி எழுதிய கடிதம்.. FUTURE பத்தி இருந்த வேற லெவல் விஷயம்.. வியந்து பார்க்கும் மக்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jul 05, 2022 05:11 PM

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவி ஒருவர் எழுதிய கடிதமும், அதில் சில விஷயங்கள் தற்போது ஒத்து போகும் வகையில் இருப்பதும், பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

school girl letter from 1969 prediction about future

Also Read | 24 மணிநேரத்துல அடுத்தடுத்து 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..கடும் அச்சத்தில் அந்தமான் மக்கள்..!

Cambridgeshire என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரோசா பெக்கர்டன். இவரது கணவரான பீட்டர், சோஃபா மற்றும் பர்னிச்சர் பொருட்களை மறுசீரமைத்து புதிதாக மாற்றும் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், அவர் சோஃபா ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கடிதம் ஒன்று சிக்கி உள்ளது.

1969 ஆம் ஆண்டில், 11 வயது மாணவி ஒருவர், தனது பள்ளி Project-இற்காக, எதிர்காலத்தில் 1980 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என எழுதி உள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம்

அப்படி அந்த சிறுமி எழுதிய சில விஷயங்கள் தற்போதைய காலத்திற்கு ஒத்து போகும் வகையில் உள்ளது. இது தான், ரோசா மற்றும் பீட்டர் ஆகியோரை கடும் வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி, 1969 ஆம் ஆண்டு என அந்த கடிதம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 1980 ஆம் ஆண்டு குறித்து அந்த பள்ளி மாணவி பின்வருமாறு எழுதியுள்ளார்.

school girl letter from 1969 prediction about future

"மின்சார கதவுகள் இருக்கு.."

"தற்போது 1980 ஆம் ஆண்டு. எனக்கு 21 வயது ஆகிறது. நான் குஷனில் அமர்ந்தபடி, காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன். 11 வயதில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதிலிருந்து பல விஷயங்கள் தற்போது மாறி உள்ளது. 1969 ஆம் ஆண்டு டிவி ஒரு ஸ்கொயர் போல இருந்தது. ஆனால், தற்போது மிகப்பெரிய சைஸ் ஆக மாறி உள்ளது. எனக்கு தற்போது திருமணம் முடிந்து விட்டது. நான் வங்கி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். எனது கணவரும் என்னுடன் இங்கே இருக்கிறார். எங்கள் வீட்டில் உள்ள கதவுகள் அனைத்தும் மின்சார கதவுகளாகும். பட்டனை அழுத்தி கதவை திறக்கவும் மூடவும் செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ கால் குறித்த கருத்து..

அதே போல, இந்த பள்ளி மாணவி தற்போதைய வீடியோ கால் அம்சம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான குறிப்பில், "1969-இல் டெலிபோன் ஒரு ஸ்கொயர் மாடலில் பாக்ஸ் போல இருந்தது. ஆனால், தற்போது உள்ள மாடலில், நீங்கள் டெலிபோன் மூலம் உங்களிடம் பேசும் நபரை பார்க்கவும் முடியும். இதற்காக டிவியில் இருக்கும் ஸ்கிரீன் போல ஒரு ஸ்கிரீனும் அமைத்து அதன் மூலம் நீங்கள் மற்றவர்களை பார்க்கலாம்" என எழுதி உள்ளார்.

school girl letter from 1969 prediction about future

1980 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதைக் குறிப்பிட்டு, 1969 ஆம் ஆண்டில் 11 வயது பள்ளி மாணவி எழுதிய கடிதங்களில் உள்ள சில விஷயங்கள் தற்போது ஒத்துப் போகும் அளவுக்கு உள்ளது.

இது தொடர்பாக கடிதத்தை கண்டுபிடித்த ரோசா பேசுகையில், "அந்த கடிதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால் அதில் அந்தப் பெண் குறிப்பிட்ட சில விஷயங்கள் தற்போதைய காலகட்டத்திற்கு ஒத்துப் போகின்றது. இதனை நான் தற்போது இணையத்தில் பகிரும் காரணம், இதை எழுதிய நபரோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவரோ இதை பார்த்து அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்புள்ளது என்பதற்காக தான்" என்ன ரோசா குறிப்பிட்டுள்ளார்.

Also Read | ஜிம்மில் இருந்த பாடி பில்டர்.. திடீர்ன்னு சுருண்டு விழுந்து உயிரிழந்த துயரம்.. போலீசார் விசாரணையில் காத்திருந்த கடும் அதிர்ச்சி

Tags : #SCHOOL GIRL LETTER #SCHOOL GIRL LETTER FROM 1969 #PREDICTION ABOUT FUTURE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. School girl letter from 1969 prediction about future | World News.