"மகனின் EX கேர்ள் ஃபரண்ட்.. இப்போ அப்பாவின் மனைவி.." 24 வயது இடைவெளி.. வியப்பை ஏற்படுத்தும் காதல் ஜோடி..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jun 30, 2022 07:14 PM

ஓஹியோ பகுதியைச் சேர்ந்தவர் சிட்னி டீன். 27 வயதாகும் இவர், ட்ரக் ஓட்டுநரான பால் (வயது 51) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் சுமார் 24 வயது வித்தியாசம் உள்ளது.

Woman, 27 married her ex boyfriends father have 24 years age gap

Also Read | "என் புருஷன் வாடகைக்கு.." திடீர்'ன்னு மனைவிக்கு தோணுன ஐடியா.. "அட, இது தான் விஷயமா??"

இவர்கள் இருவரும் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்பதும்,எப்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சிட்னி டீன் தன்னுடைய பள்ளிப்பருவ வயதில் பாலை சந்தித்துள்ளார். அதாவது சிட்னியின் நெருங்கிய ஆண் தோழரின் தந்தை தான் பால்.

Woman, 27 married her ex boyfriends father have 24 years age gap

ஆண் நண்பரின் தந்தையுடன் பழக்கம்..

சிறுவயதில் அடிக்கடி பால் வீட்டிற்கு அவரின் மகனை பார்ப்பதற்காக சிட்னி வந்து கொண்டே இருந்துள்ளார். தொடர்ந்து, சில ஆண்டுகள் சென்ற பிறகு, வேறு ஒரு பெண்ணை பாலின் மகன் காதலிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை பாலின் மகனுடன் நேரம் செலவழித்து வந்த சிட்னி, தனியாக இருப்பது போல உணர்ந்துள்ளார். இதனால், ஒரு ஆறுதலுக்காக தனது தோழரின் தந்தையான பாலிடம் பேச ஆரம்பித்துள்ளார் சிட்னி.

தொடர்ந்து, சிட்னியும் பால் என்பவரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட தொடங்கியுள்ளனர். பின்னர், 2016 ஆம் ஆண்டு பாலை திருமணமும் செய்து கொண்டார் சிட்னி. தனது சிறுவயது ஆண் நண்பரின் தந்தையை சிட்னி திருமணம் செய்து இருந்தாலும், இதற்காக நிறைய ஏற்ற இறக்கங்களை அவர்கள் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Woman, 27 married her ex boyfriends father have 24 years age gap

முதல்'ல சப்போர்ட் பண்ணல..

இது பற்றி பேசும் சிட்னி, "பால் மீது காதல் வயப்படுவேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை. சற்று பாரம்பரியமற்ற முறையில் நானும் அவரும் சந்தித்துக் கொண்டாலும், இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்னதாக எங்களின் உறவு குறித்து எனது பெற்றோர்களிடம் முதலில் தெரிவித்த போது அவர்கள் சுத்தமாக ஆதரிக்கவில்லை. எங்களுக்குள் இருந்த வயது இடைவெளி தான் இதற்கு காரணமாக இருந்தது. தொடர்ந்து, மெல்ல மெல்ல எனது கணவரிடம் பேசி பேசி, இருவரும் தற்போது முழு ஆதரவைத் தருகின்றனர். எங்களின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது மிகவும் நெருக்கமாக எங்களுடன் இருக்கின்றனர்.

Woman, 27 married her ex boyfriends father have 24 years age gap

ஆனால் என்னுடைய நெருங்கிய தோழியாக இருந்த ஒருவர், இந்த உறவின் காரணமாக என்னிடம் பேசுவதையே பெரிய அளவில் நிறுத்தி விட்டார். எங்களுக்குள் இருந்த வயது வித்தியாசம் காரணமாக எனது தோழியாகவும் இருக்க அவள் விரும்பவில்லை" என சிட்னி தெரிவித்துள்ளார்.

சிறுவயது ஆண் நண்பனாக இருந்தவருடனான பிரிவுக்குப் பின்னர், அவரது தந்தையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் குறித்து, தற்போது இணையத்தில் பல கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்.. "தற்கொலை இல்லை.. ஆனா..." - பீதியை ஏற்படுத்திய புதிய திருப்பம்.. வெளியான பகீர் தகவல்

Tags : #WOMAN #MARRIED #EX BOYFRIENDS FATHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman, 27 married her ex boyfriends father have 24 years age gap | World News.