தீராத முதுகுவலி.. கிட்னி-ல கல் வந்துருச்சோன்னு பயத்துல ஹாஸ்பிட்டலுக்கு சென்ற பெண்.. டாக்டர் சொன்னதை கேட்டு அப்படியே திகைச்சு போய்ட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்தீராத முதுகுவலியால் மருத்துவரை சந்திக்க என்ற பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மருத்துவர்.
இணையம் முழுவதும் பல்வேறு மருத்துவ குறிப்புகளை பலர் எழுதி வருகின்றனர். இதனால் பலரும் உடல் சார்ந்த சிக்கல்களை மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்காமல் தாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் பலரும் அவ்வப்போது பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் தீராத முதுகுவலியால் பாதிக்கப்பட்ட பின்னரும் தனக்கு சிறுநீரக கற்கள் இருக்கலாமோ என்ற அச்சத்தில் இருந்திருக்கிறார். ஆனால், உண்மை தெரிந்தவுடன் திகைத்துப்போயிருக்கிறார்.
சிறுநீரக கற்கள்
பல நாட்களாக தீராத முதுகு வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார் கைலா (Kayla) எனும் பெண். இதனால் சிரமப்பட்டுவந்த கைலா, ஒருநாள் அதீத வலியால் துடித்துப்போயிருக்கிறார். இதனையடுத்து தனது வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அவர், தனது சிக்கலை தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து கைலாவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர் மருத்துவ பணியாளர்கள்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கைலாவை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்போது அவர் 38 வார கர்ப்பமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை கைலாவிடம் மருத்துவர்கள் கூற அவர் திகைத்திருக்கிறார்.
எனக்கு சரியாக புரியவில்லை
இந்நிலையில் இதுகுறித்து கைலா," எனக்கு தற்போது 22 வயதாகிறது. சென்ற வருடம் அதாவது எனது 21 வயதில் கடுமையாக முதுகு வலியை எதிர்கொண்டேன். ஒருவேளை சிறுநீரக கற்களால் இந்த வலி ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்து மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால், நான் 38 வார கர்ப்பமாக இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. என்ன நடக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. ஆனால், விரைவில் பிரசவ வலி வரலாம் என மருத்துவர்கள் கூறினார்கள்" என்றார்.
அதன்பிறகு சில வாரங்களில் பெண் குழந்தையை பெற்றெடுத்த கைலா, தற்போது இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு கர்ப்பகால அறிகுறிகள் பற்றி அப்போது தெரிந்திருக்கவில்லை என்பதால் கிட்னியில் கற்கள் இருக்கலாம் என நினைத்திருந்ததாக கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.