"விக்ரம்" படம் பார்த்த வானதி சீனிவாசன்.. கமல்ஹாசனை வாழ்த்தி பதிவிட்ட வைரல் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Shiva Shankar | Jul 05, 2022 06:17 PM

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் பலர் இணைந்து நடித்து கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.

Vanathi Srinivasan Praises Kamal for Vikram movie viral

Also Read | Sidhu Moose Wala Case: பாடகரை கொன்ற பின்.. கொலையாளிகள் செய்தது என்ன? வடமாநிலங்களை அதிரவைத்த சம்பவம்.!

பல வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி ஒரு படம் அதிக வசூல் குவித்தது என்றால் அந்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் இந்த வருடத்தில் மிக முக்கியமான பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் கமல்ஹாசன், இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த லெகசஸ் காரை பரிசாக அளித்தார்.

இதே போல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு ரோலக்ஸ் கடிகாரத்தை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கினார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் பணிபுரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசாக வழங்கி இயக்குனர் லோகேஷ் கனகராஜன் டீமை நடிகர் கமலஹாசன் வாழ்த்தினார்.

Vanathi Srinivasan Praises Kamal for Vikram movie viral

விமர்சகர்களும் பார்வையாளர்களும் விக்ரம் திரைப்படத்தை பெறுவாரியான வெற்றி பெற்ற திரைப்படமாக அங்கீகரித்ததை தொடர்ந்து பலரும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தேசிய செயலாளரும் கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தம் ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். 

அதில், “தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து  மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.‌

Also Read | 8 நாளா பையன காணும்.. வடிகால் மூடிக்கு மேலே நடந்த பாதசாரிக்கு கேட்ட சத்தம்.. "அதிர்ஷ்டம் பண்ணிருக்கோம்" - பெற்றோர் நெகிழ்ச்சி.!

Tags : #VIKRAM MOVIE #KAMAL HAASAN #LOKESH KANAGARAJ #VANATHI SRINIVASAN #VANATHI SRINIVASAN PRAISES VIKRAM MOVIE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vanathi Srinivasan Praises Kamal for Vikram movie viral | Tamil Nadu News.