கணவர் இறந்து.. 2 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை.. "அவரு மேல அம்புட்டு லவ்வு'ங்க.." மனம் உருக வைத்த மனைவி..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jun 24, 2022 08:17 PM

கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி செய்துள்ள செயல் ஒன்று, பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

woman gives birth to husband baby after his death using frozen sperm

Also Read | அயோத்தி நதியில் கணவன் - மனைவி இடையே நடந்த சம்பவம்.. ரவுண்டு கட்டிய பக்தர்கள்.. சர்ச்சையை உண்டு பண்ண வீடியோ

இங்கிலாந்தின் Liverpool என்னும் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ். இவருக்கும் லவுரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்திற்குப் பின்னர் தங்களது இல்லற வாழ்வை மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளனர் கிறிஸ் லவுரன் ஜோடி.

கணவருக்கு நேர்ந்த துயரம்..

இதனைத் தொடர்ந்து, ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கும் அந்த தம்பதியினர் வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. கிறிஸ் மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட இருவரும் அதிர்ந்து போயினர். மேலும், இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் கிறிஸ். ஆனால், அதே வேளையில் கிறிஸ் எப்போது வேண்டுமானாலும் இருந்து விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அடுத்த கொஞ்ச நாட்களில் படுத்த படுக்கையாகி விட்டார் கிறிஸ்.

woman gives birth to husband baby after his death using frozen sperm

மனைவி எடுத்த முடிவு

இருந்த போதும், தனது கணவரால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என விருப்பப்பட்டு உள்ளார் லவுரன். இதற்காக, கிறிஸ்ஸின் விந்தணுவை சேமித்து வைத்துள்ளார் லவுரன். இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் கிறிஸ். கணவர் உயிரிழந்து சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் லவுரன். இதற்காக ஏற்கனவே சேமித்து வைத்து தனது கணவரின் விந்தணுக்களை பயன்படுத்தி உள்ளார்.

woman gives birth to husband baby after his death using frozen sperm

அப்பா மாதிரியே இருக்கான்...

அது மட்டுமில்லாமல், IVF மூலமாக கடந்த மே மாதம் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார் லவுரன். இதுகுறித்து பேசும் லவுரன், "எனது குழந்தையை பார்க்கும் போது எனது கணவரை பார்ப்பது போலவே உள்ளது. எனது கணவரின் புகைப்படத்தை குழந்தைக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை உணர்ந்து கொண்டே இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், எனது கணவருக்கு இருக்கும் M Shape தலை முடியை போலவே எனது மகனுக்கும் உள்ளது" என லவுரன் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகனுக்கு Seb என்ற பெயரையும் அவர் வைத்துள்ளார்.

woman gives birth to husband baby after his death using frozen sperm

ஆசை ஆசையாக கணவருடன் இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு வந்த லவுரன், கணவன் பிரிவினால் துவண்டு போகாமல், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு அன்பிற்கு முன்னுதாரணமாக விளங்கும் லவுரனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. தோண்டப்பட்டு கிடந்த தரை.. தனியாக இருந்த மகன்.. அரண்டு போன கிராமம்..

Tags : #WOMAN #HUSBAND #BIRTH #FROZEN SPERM #கணவர் #குழந்தை #மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman gives birth to husband baby after his death using frozen sperm | World News.