"இப்ப கெளம்புனா கரெக்ட்டா இருக்கும்.." சாப்பாட எடுத்துக்கிட்டு குதிரையில் கிளம்பிய DELIVERY ஊழியர்.. காரணம் என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம், நமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
வேலையில் பிசியாக இருக்கும் பலருக்கும், நேரடியாக உணவகங்கள் சென்று உண்ண சற்று நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், நம்மில் பலரும் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து உண்டு வருகிறோம்.
மேலும், சோமாட்டோ, ஸ்விகி என பல முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஏராளமான நபர்களும் உணவு டெலிவரி செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர்.
குதிரையில் உணவு டெலிவரி
இப்படி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள், மழை, வெயில் என எதையும் கருதாமல் வாடிக்கையாளர்களுக்கு உணவை நேரத்தில் சேர்க்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக இருப்பார்கள். அந்த வகையில், பைக்கில் பெரும்பாலான ஊழியர்கள் உணவை டெலிவரி செய்வதை தான் பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இளைஞர் ஒருவர் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்வது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல முக்கிய சாலைகள் மழை நீரால் நிரம்பிக் கிடக்கும் நிலையில், ஸ்விகி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர், மழை நேரத்தில் உணவு டெலிவரி செய்ய சென்று கொண்டிருக்கிறார். அதுவும் குதிரை ஒன்றில் அந்த இளைஞர் சவாரி செய்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோவை அங்குள்ள வாகனத்தில் இருந்து ஒருவர் எடுத்து பதிவிட, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மழை நேரத்தில் சாலை முழுவதும் நிரம்பிக் கிடக்கும் நீருக்கு மத்தியில், பைக்கில் செல்வதை விட, குதிரை சிறந்ததாக இருக்கும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல, மழை என்பதை தாண்டி எப்படியாவது உணவை வாடிக்கையார்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீவிரத்துடன் குதிரையில் சென்று செயல்பட்ட ஸ்விகி ஊழியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | 1969'ல பள்ளி மாணவி எழுதிய கடிதம்.. Future பத்தி இருந்த வேற லெவல் விஷயம்.. வியந்து பார்க்கும் மக்கள்