"என் புருஷன் வாடகைக்கு.." திடீர்'ன்னு மனைவிக்கு தோணுன ஐடியா.. "அட, இது தான் விஷயமா??"
முகப்பு > செய்திகள் > உலகம்தனது கணவரை வாடகைக்கு விட்ட மனைவியும், அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Also Read | பனி லிங்க தரிசனம்.. பரவசமடைந்த பக்தர்கள்.. 2 வருடம் கழித்து கோலாகலமாக துவங்கிய அமர்நாத் யாத்திரை..!
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் லாரா யங். இவரது கணவரின் பெயர் ஜேம்ஸ். இவர் Warehouse ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். லாரா - ஜேம்ஸ் தம்பதியினருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
லாராவின் மூன்று குழந்தைகளில், இரண்டு பேருக்கு ஆட்டிசம் பாதிப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனது வேலையை விட்டு மனைவிக்கு உதவியாக வீட்டிலேயே இருந்து அனைத்து வேலைகளும் கவனித்து வந்துள்ளார் ஜேம்ஸ்.
என் புருஷன் வாடகைக்கு..
இரண்டு பேரும் வீட்டிலேயே இருந்து வந்ததால், பொருளாதாரத்தில் அவர்கள் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதனை எப்படி சமாளிப்பது என இருவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் லாரா யங்கிற்கு அசத்தலான யோசனை ஒன்று தோன்றியுள்ளது. வீட்டிலேயே இருந்து வந்த ஜேம்ஸ், அங்கு எந்த நேரமும் சும்மா இருக்க மாட்டாராம். வீட்டில் இருக்கும் வீணான பொருட்களைக் கொண்டு ஏதாவது பொருட்களை உருவாக்குவது, கிட்சனை டிசைன் செய்வது, புதிதாக டேபிள் உருவாக்குவது, தோட்ட வேலைகளை கவனிப்பது என ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார். இதனைக் கண்ட மனைவி லாரா, இத்தனை திறன்கள் உள்ள தனது கணவரை ஏன் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்க கூடாது என நினைத்துள்ளார்.
எல்லா வேலையும் பண்ணுவாரு..
இதற்காக, "Rent My Handy Husband" என்ற இணையதளம் ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். ஒரு வீட்டில் ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்ய வேண்டிய நிலை இருக்கும். ஆனால், அதற்கான ஆட்கள் உடனடியாக கிடைத்து விட மாட்டார்கள். அப்படி ஆட்கள் தேவைப்படும் இடங்களில், பல திறன்களை கையில் வைத்துள்ள கணவரை அனுப்ப முடிவு செய்துள்ளார் லாரா யங். இப்படி பணிக்கு அனுப்புவதற்கு அவருக்கு 35 யூரோக்களை விலை நிர்ணயம் செய்துள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் 3300 ரூபாய் ஆகும். டிவியை ஃபிட் செய்வது ஆரம்பித்து, வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது என ஏகப்பட்ட வேலைகளை ஜேம்ஸ் தற்போது செய்து வருகிறார். இதனால், தற்போது பொருளாதார ரீதியிலும் ஜேம்ஸ் - லாரா தம்பதியினர், சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெறய பேர் பாராட்டுனாங்க...
வீட்டில் அனைத்து வேலைகளும் செய்த கணவரை வைத்து மிகப்பெரிய ஒரு ஐடியாவை போட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ள லாராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பேசும் லாரா, "பலரும் இந்த ஐடியாவை பெரிய அளவில் வரவேற்றார்கள். அதே வேளையில் கணவர் வாடகைக்கு என இருந்ததால், சிலர் இதனை தவறாகவும் புரிந்து கொண்டார்கள். வீட்டிலுள்ள சிறிய சிறிய வேலைகளை செய்வதற்கு ஆட்கள் கிடைக்க சிரமமாக இருப்பதால், இது பெரிதும் பயன்படுவதாக பலரும் தெரிவித்தனர்" என கூறி உள்ளார்.