‘கொரோனா வைரஸுக்கு புதிய சிகிச்சை முறை’.. சோதனைக்கு தாமாக முன்வந்த 24 பேர்.. அசத்திய பிரான்ஸ் பேராசிரியர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 23, 2020 11:08 AM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

Professor Didier Raoult discusses Coronavirus and Chloroquine

பிரான்ஸ் நாட்டின் ஐஹெச்யூ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியர் Didier Raoult என்ற தொற்றுநோயியல் துறை வல்லுரை கொரோனா வைரஸுக்கு சிகிச்சை முறையை உருவாக்கும் ஆராய்ச்சியில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியது. Nice மற்றும் Avignon நகரங்களை சேர்ந்த, தாங்களாக முன்வந்த 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த சோதனையில் Plaquenil என்ற மருந்துடன் இணைத்து மலேரியாவை குணப்படுத்தும் Chloroqulne என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த Chloroqulne மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்தபோது நோயாளிகள் விரைந்து குணமடைந்ததாகவும், அவர்கள் வைரஸை பரப்பக்கூடிய காலஅளவு பெருமளவு குறைந்ததாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கு தினந்தோறும் 600 மைக்ரோகிராம் அளவு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

Chloroqulne மருந்துடன் Plaquenil மருந்தை பெறாத நோயாளிகள் 6 நாட்களுக்கு பிறகும் நோய்தொற்றை பரப்புவர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் Plaquenil மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் 25% பேர் மட்டுமே 6 நாட்களுக்கு பிறகும் நோய்தொற்றை பரப்புவர்களாக இருந்துள்ளனர். சோதனை செய்யப்பட்டுள்ள இந்த இரு மருந்துகளும் இதற்கு முன்னர் சீனாவின் மருத்துவ சிகிச்சை பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #DIDIERRAOULT #CORONAVIRUS #CHLOROQUINE