VIDEO: பாதுகாப்பு, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நானும் ‘தடுப்பூசி’ போட்டுக்கிறேன்.. சீரம் ‘சிஇஓ’ அசத்தல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அடர் பூனாவாலா தனது நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று (16.01.2021) தொடங்கி வைத்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா, தனது நிறுவத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கொண்டார்.
I wish India & Sri @narendramodi ji great success in launching the world’s largest COVID vaccination roll-out. It brings me great pride that #COVISHIELD is part of this historic effort & to endorse it’s safety & efficacy, I join our health workers in taking the vaccine myself. pic.twitter.com/X7sNxjQBN6
— Adar Poonawalla (@adarpoonawalla) January 16, 2021
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில் தனது நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தடுப்பூசியின் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த, நானும் தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறேன்’ என அடர் பூனாவாலா பதிவிட்டுள்ளார்.