SAVUKKU SHANKAR : அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை? - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற கிளை மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![Madras HC sentences Savukku Shankar to 6 months imprisonment Madras HC sentences Savukku Shankar to 6 months imprisonment](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/madras-hc-sentences-savukku-shankar-to-6-months-imprisonment.jpg)
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளிலும் தன் கருத்துக்களையும் விமரசனங்களையும் டிவி மற்றும் யூடியூப்களில் முன்வைத்து வந்தவர். பல முன்னணி தற்கால நிகழ்வுகள் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் அண்மையில் சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பேசும்போது, ஏதோ ஒரு தளத்தில் நீதித்துறை குறித்து அவதூறு விமர்சனம் முன்வைத்ததாக கூறப்பட்டு அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. செப்டம்பர் 1-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 8-ஆம் தேதிகளில் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவந்ததுடன் சவுக்கு சங்கர் இது தொடர்பாக ஆஜராகவும், விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பில் இருந்து நீதிமன்ற அவதூறு கருத்து பகிர்வுக்கு முறையான விளக்கமும், தொடர்ந்து இதுபோன்ற கருத்து பேசாமல் இருப்பது குறித்த முறையான உத்திரவாதமும் தரப்படாததாக கூறப்பட்டு, குற்றவியல் நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கையின் கீழ் தற்போது சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)