கிரிக்கெட் அம்பையர் டூ குட்டிக் கடை முதலாளியாக மாறிய பிரபலம்.. திடீரென மாரடைப்பால் நேர்ந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் உலகில் வீரர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை போல ஒரு சில நடுவர்களும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுவபவர்களாக இருப்பார்கள்.

Also Read | "சோழ சாம்ராஜ்யம் பத்தி இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும்" - PS1 பாக்க போறாரா ஆனந்த் மஹிந்திரா..? பரபரப்பு ட்வீட்
அந்த வகையில், மிக முக்கியமான கிரிக்கெட் நடுவர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆசாத் ராஃப். பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத், தற்போது மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள தகவல், கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கடும் வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
ஆரம்ப காலங்களில் உள்ளூர் முதல் தர போட்டிகளில் கிரிக்கெட் வீரராக களமிறங்கி வந்த ஆசாத் ராஃப், அதன் பின்னர் நடுவராக விரும்பினார். தொடர்ந்து, ஏராளமான சர்வதேச போட்டிகளில் நடுவராகவும் ஆசாத் பணியாற்றி வந்தார்.
2006 ஆம் ஆண்டு ஐசிசியின் எலைட் பிரிவு நடுவர்கள் பட்டியலிலும் ஆசாத் ராஃப் இடம்பெற்றிருந்தார். அப்படி இருக்கையில், 2013 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடர் நடைபெற்ற சமயத்தில், மேட்ச் பிக்சிங் புகார் ஆசாத் மீது எழுந்தது. இதனால், ஆசாத் ராஃப் நடுவர் வாழ்க்கை சற்று தடுமாறியது. அத்துடன் சில ஆண்டுகள் அவருக்கு நடுவராக இருக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், ஐசிசியின் எலைட் நடுவர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்.
ஐந்தாண்டு தடைக்காலம் முடிந்த போதிலும் மீண்டும் நடுவராக பணியாற்றும் வாய்ப்பு ஆசாத் ராஃப்பிறகு கிடைக்கவே இல்லை. இதன் பின்னர், பாகிஸ்தானில் செருப்பு கடை ஒன்றை ஆசாத் ராஃப் நடத்தி வந்திருந்ததாக செய்திகள் வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது மாரடைப்பு காரணமாக 66 ஆவது வயதில் ஆசாத் ராஃப் மறைந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், ஆசாத் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "ஒரு காலத்துல ஹாஸ்பிடலா இருந்த இடம்".. இப்போ உள்ள போய் பாத்தா.. அல்லு சில்லு சிதற வைக்கும் சம்பவம்!!

மற்ற செய்திகள்
