'தமிழ்நாட்டில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்த சட்டங்கள் வலுப்பெறுகிறதா'?.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!.. சூழலியலாளர்கள் வரவேற்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் வனப் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு மிக முக்கியமான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ஒருவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து வனத்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நடுவட்டத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை அடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
அதில் மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த தீர்ப்பானது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே, அங்கு கட்டப்படும் ரிசார்ட்டுக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.