திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Jan 08, 2021 02:42 PM

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

master release madras high court stays 100 percent theatres oocupancy

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி தர முடியும்" என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தற்போது உள்ள 50% இருக்கை என்ற நிலையே தொடர வேண்டும் எனவும், இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Master release madras high court stays 100 percent theatres oocupancy | Tamil Nadu News.