‘சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண்’.. ‘காவலர் எடுத்த துரித முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 10, 2019 12:06 PM

சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman slipped running train in Mambalam railway station

சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது மாம்பலம் ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் நின்ற மின்சார ரயில் புறப்பட்டபோது இளம்பெண் ஓருவர் வேகமாக ஓடும் ரயில் ஏற முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.

இதனை கவணித்த ரயில்வே காவலர் உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். இதில் லேசான காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பியுள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணின் தோழிக்கு தகவல் அளித்து உடன் அனுப்பி வைத்துள்ளனர். மாம்பலம் ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக அப்பெண் ரயிலில் இருந்து இறங்கியதாகவும், அப்போது ரயில் உடனடியாக கிளம்பியதால், அவசரமாக ரயிலில் ஏற முயன்றால் எதிர்பாரதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்தாக கூறப்படுகிறது.

Tags : #CHENNAI #TRAIN #CCTV