'ஓடும் காரில்'... 'கோவை பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்' ... 'பதை பதைக்க' வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jun 11, 2019 01:56 PM
ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவடப்படும் சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கோவையை சேர்ந்த இந்த பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து என்டிடிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஆர்த்தி அளித்துள்ள பேட்டியில் ''கடந்த மாதம்,தனது கணவரும் அவர்களது பெற்றோரும்,தன்னை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாகவும், தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.நீண்ட நாளாக கணவர் தன்னை கொடுமைபடுத்தியதாகவும்,இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு,தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஆர்த்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ சென்றுள்ளார். ஆனால் ஆர்த்தியின் கணவர் அருண் மீண்டும் அவரை கொடுமைப்படுத்தியுள்ளார்.இதைத்தொடர்ந்து, ஊட்டி காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார் ஆர்த்தி, எனினும் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அருண் அப்போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது பெற்றோரிடம் இருந்து ஆர்த்தியை தனியாக வைப்பதாக எழுதி கொடுத்த அருண், மே.9ஆம் தேதி கோவையில் தனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.அப்போது காரில் வாக்குவாதம் ஏற்பட,ஆர்த்தி காரிலிருந்து வெளியே தள்ளி விடப்பட்டுள்ளார்.இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.