'ஏசி இருக்குற வீடு மட்டும் தான் டார்கெட்...' 'பகல்ல பார்த்து வச்சிட்டு, நைட்ல போய்...' - அதிர வைக்கும் 'பகீர்' பின்னணி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இதுவரை ஆறு வீடுகளில் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது, அதுமட்டுமல்லாமல் நான்கு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டும் போயிருந்தது.

இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும் கொள்ளையை தடுக்கும் வகையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கேமராக்களில் பதிவான காட்சிகள், கொள்ளை நடந்த இடங்களில் பதிவாக கைரேகை ஆகியவற்றை வைத்து காவல் துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது, தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்கிற கார்த்திக் (38) என்பவர் வீடுகளில் புகுந்து நகை திருட்டு, இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரை தனிப்படையினர் தேடி வந்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். உடனடியாக அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள திருடன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவி தனியாக தான் எங்கும் திருட செல்வார் என்றும் கொள்ளையடிக்கும் பணத்தில் தன்னுடைய வழக்கு செலவிற்காக குறிப்பிட்ட பணத்தை வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில், உயர்தர ஹோட்டல்களில் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்,
இவர் ஏசி இருக்கும் வீடுகளை மட்டும் தான் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஏசி வசதி உள்ள வீடுகளில் இருப்பவர்கள் குளிரில் நன்றாக அசந்து தூங்குவார்கள் என்பதால் எளிதாக வந்த வேலையை நிறைவேற்றி விடலாம் என்பது தான் திட்டம்.
அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்
