'ரூம்' போட்டு 'யோசிக்குறதுலாம்' ஒண்ணுமே இல்ல...! இந்த 'ஐடியா'லாம் அதுக்கும் மேல...! - எவ்ளோ 'ட்ரிக்ஸா' பிளான் பண்ணியிருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், பல மாதங்களாகவே தங்கக்கடத்தல் அதிகரித்து வருகிறது.
இந்த விமான நிலையங்கள் வழியாக துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து அதிகமாக தங்கக் கடத்தல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (01-07-2021) துபாயில் இருந்து கோழிகோட்டுக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பெயரில், விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் அதிகாரிகள் தீவிர பரிசோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது காசர்கோட்டை சேர்ந்த சாபி (31) என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சந்தேகமடைந்த போலீசார், அவரை தனியே கூப்பிட்டு விசாரித்துள்ளனர். ஆனால், அவரது பேக்கில் தங்கம் எதுவும் இல்லை.
அதன்பின் அந்த நபர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்டை சோதனை செய்த போது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாபி, தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்டின் உள்பகுதியில் தங்கத்தை உருக்கி பெயின்ட் போல் அடிப்பது போல் பூசி, அதன்மேல் லைனிங் துணியால் தைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், சாபி துபாயில் இருந்து வந்திருப்பதால் 2 வாரம் அவர் தனிமையில் இருக்கும் கெடு முடிந்த பின் அவரது முன்னிலையில் பேன்டில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.