கையில 'திருமண அழைப்பிதழ்' கொண்டு வந்தா தான்... 'அதெல்லாம் நீங்க வாங்க முடியும், இல்லனா நோ சான்ஸ்...' - கேரள அரசு பிறப்பித்துள்ள 'அதிரடி' உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மாநிலங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் மாநிலங்கள் சில தளர்வுகளையும் அமல்படுத்தி வருகிறது.
கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கேரள மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. L
அதில், காலை 5 மணிமுதல் 7 மணி வரையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஜவுளி மற்றும் நகை கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே இந்த இரண்டு கடைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
