ஜோ பைடன் 'ரஷ்ய' அதிபர் புதினுக்கு கொடுத்த 'ரெண்டு' பரிசு...! 'அதுல ஒண்ணு அவரு ரொம்ப விரும்பி யூஸ் பண்றது...' - அதுக்கு பின்னாடி 'இப்படி' ஒரு விஷயம் இருக்கா...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் சந்திப்பின் போது கொடுத்த இரு சிறப்பு பரிசுகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிராக இருந்தாலும் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசிக் கொள்வது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் கடந்து புதன்கிழமை (16-06-2021) சந்தித்தனர்.
அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்கக் காப்பால் செய்யப்பட்ட கண் கண்ணாடியை பரிசளித்த சம்பவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
பொதுவாகவே, அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இதனை முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பில் மட்டுமே அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம். இந்நிலையில் இந்த வகை கண்ணாடியை பரிசாக வழங்கியுள்ளார்.
அதோடு புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கினார்.

மற்ற செய்திகள்
