'என்ன வயசு ஆவுது இந்த பாப்பாவுக்கு'!?.. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தட்டித் தூக்கிய சிறுமி!.. உலக சாதனையை அசால்ட்டாக நிகழ்த்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஸ்கேட் போர்டிங் விளையாட்டில் ஜப்பானைச் சேர்ந்த 13 வயது சிறுமி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் 2020 ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான ஸ்கேட் போர்டிங் விளையாட்டு முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நம் ஊரில் காலில் சக்கரங்களை கட்டி கொண்டு விளையாடப்படும் ஸ்கேட்டிங்கை போன்ற இந்த விளையாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் போட்டியிட்டனர்.
அதில் தகுதி போட்டிகள் மூலம் 8 வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். அதில் ஜப்பானைச் சேர்ந்த நிஷியா என்ற சிறுமி தனக்கு உரிய பாணியில் சாகசம் செய்து முதலிடம் பிடித்தார். இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியிருக்கும் சிறுமிக்கு 13 வயது 330 நாட்கள் மட்டுமே ஆகிறது.
அதே சமயம் பிரேசிலைச் சேர்ந்த ராய்சா லீ என்ற சிறுமி இப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் 13 வயது 203 நாட்களில் இச்சிறப்பை பெற்றதன் மூலம் ஒலிம்பிக் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற வரலாற்றை பதிவை செய்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ப்ரிங் போர்டு வீராங்கனை மெர்ஜோரி 13 வயது 268 நாட்களில் பதக்கம் வென்றதே இதற்கு முன்னர் வரை சாதனையாக இருந்து வந்தது. அதனை தற்போது பிரேசிலின் ராய்சா முறியடித்துள்ளார். மேலும், ஸ்கேட் போர்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜப்பானின் நாகயமாவுக்கு 16 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
