'ரெண்டே 2 பேர ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி...' 'தங்கத்தை தட்டி தூக்கி...' - கெத்து காட்டும் குட்டி நாடு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிறிய நாடு ஓன்று ஒலிம்பிக் போட்டிக்கு வெறும் 2 வீரர்களை மட்டுமே அனுப்பி தங்கம் வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் மிக சிறிய நாடான பெர்முடாவில் இருந்து வெறும் 2 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
பெர்முடா சார்பாக டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற 33 வயதான ஃப்ளோரா டஃப்பி என்ற வீராங்கனை டிரையத்லான் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
இந்த டிரையத்லான் போட்டி நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாகும். முதலில் 1,500 மீட்டர் நீச்சலும், அதன் பிறகு 40 கி.மீ தொலைவு சைக்கிள் பயணமும், அதனை அடுத்து 10 கிலோ மீட்டர் தொலைவு ஓட்டமும் இடைவிடாது இருக்கும். தொடர்ச்சியாக மூன்று கட்டங்களை முடிக்க வேண்டும். டஃப்பியோ முன்றையும் வெற்றிகரமாக செய்து தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார்.
இதுகுறித்து கூறிய டஃப்பி, 'நான் வாங்கும் முதல் தங்கம் இது. என்னுடைய கனவும், அதற்கு மேலாகப் பெர்முடாவின் கனவும் இன்று நிறைவேறியுள்ளது' என பெருமையுடன் கூறியுள்ளார்.
40 கி.மீ நீளம் கொண்ட பெர்முடா நாட்டில் மொத்தம் 68 ஆயிரம் மட்டுமே உள்ளனர். அதோடு, டஃப்பி பங்கேற்ற 51.5 கி.மீ தொலை கொண்ட டிரையத்லான், அவரது நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Golden glory!
Flora Duffy wins the women's #Triathlon - it's #BER's first ever Olympic gold!@WorldTriathlon pic.twitter.com/stRcyD1uoo
— Olympics (@Olympics) July 26, 2021