ராக்கெட் வேகத்தில் உயர்ந்த 'தங்க' விலை...! 'புதிய உச்சம்...' இன்றைய நிலவரம் என்ன...? - சோகத்தில் நகைப்பிரியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ள செய்தி நகை வாங்குபவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு பிரச்சினைகள் காரணமாக தொழில் வளம் குன்றி பொருளாதார ரீதியாக சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தங்கம் விலையேற்றம் கூடுதல் தலைவலியை உருவாக்கியுள்ளது.
கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து தொழில்களுமே பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தங்கத்தின் மீது முதலீடு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
இதன் காரணமாக, தங்கம் விலைநாளுக்கு நாள் ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.36,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4,562க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
