'தாலி கட்டிட்டு வர்றதுக்குள்ள...' 'போட்ட பிளானை பக்காவா முடிச்சிடலாம்...' யாரு இத பண்ணியிருப்பா...? - கடைசியில தெரியவந்த 'அதிர' வைக்கும் ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள T.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்.

பொறியாளராக பணிபுரியும் ராமதாஸின் மகன் தர்மராஜிற்கும், காங்கிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவரது மகள் சந்தியாவுக்கும் இரு குடும்பத்தினரின் ஒப்புதலோடு நேற்று (13.06.2021) T.கோபுராபுரத்தில் உள்ள கோவிலில் எளிய முறையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதிகாலை 5 மணிக்குத் திருமணம் என்பதால், திருமண வீட்டார் விடியற்காலை 4 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்காக கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்து காலை 7 மணியளவில் வீட்டிற்கு வந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள், பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதோடு, கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. அப்போது மணமகனின் உறவினரே கொள்ளை அடித்த தகவல் தெரிய வந்தது.
மணமகனின் சித்தப்பா முருகேசனின் மகன் பாபு தான் திருமண வீட்டில் திருடியுள்ளார். இந்நிலையில், போலீசார் வழக்குப் பதிவுசெய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
