VIDEO: 'இதுக்கு மேல நம்ம வயிறு தாங்காது...' 'யானை செய்த மொரட்டு சம்பவம்...' கிச்சனுக்கு வந்து பார்த்தப்போ மிரண்டு போயிட்டாங்க...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாகவே யானைகளின் குறும்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். அதுபோல் தாய்லாந்தில் ஒரு யானை செய்துள்ள காரியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தின் ஹூவா ஹின் (Hua Hin) நகருக்குள் உணவிற்காக நுழைந்த யானை ஒன்று கடுமையான பசியுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. ஆனால் அதற்கு எங்குமே உணவு கிடைக்கவில்லை.
அப்போது தன் மோப்ப சக்தியால் ஒரு வீட்டின் சமையலறையை கண்டுபிடித்த யானை அந்த வீட்டின் சமையலறை சுற்றுச்சுவரை உடைத்து, தலையை மட்டும் உள்ளே விட்டு, அரிசி, தானியம் உணவுப்பொருட்களை ருசித்துக்கொண்டிருந்தது. அப்போது வீட்டிற்கு பின்புறம் பயங்கர சத்தம் கேட்டது. இடி ஏதாவது விழுந்ததா என சமயலறைக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தேவையான அளவு சாப்பிட்டுவிட்டு யானை அங்கிருந்து சென்றது.
உணவு தேடி காடுகளை விட்டு வெளியேறும் யானைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது டிரென்டிங் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்
