திருமணத்தை மீறிய உறவு.. சிறப்பு பூஜை என மந்திரவாதி செய்த நடுங்க வைக்கும் காரியம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சொல்லப்படும் தம்பதியை மந்திரவாதி ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது.
Also Read | ஒருகாலத்துல பெரும் கோடீஸ்வரரா இருந்தவரா.?.. இப்போ ரோட்டுக்கடை நடத்தும் துயரம்.. இதான் காரணமா.?
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகில் உள்ள கேலாபாவடி என்ற இடத்தில் இருக்கும் வனப்பகுதியில் கடந்த 18-ம் தேதி ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு ஆடையின்றி கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கொலை செய்யப்பட்டவர்கள் ராகுல் மீனா (30 வயது) மற்றும் சோனு குன்வார் (28 வயது) என்பதும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என போலீசுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் பாலேஷ் எனும் மந்திரவாதிக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவரை காவல்துறையினர் விசாரிக்க பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ராகுல் மற்றும் சோனு இருவருமே தனித்தனியே திருமணம் ஆனவர்கள். இருவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள கோவிலுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம்.
அப்போது ராகுல் மற்றும் சோனு இடையே பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர்களது உறவு குறித்து ராகுலின் மனைவியிடம் பாலேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால், பாலேஷை ராகுல் மிரட்டியதாக தெரிகிறது. மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படும் பாலேஷ், ராகுலை பழிவாங்க நினைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி ராகுல் மற்றும் சோனுவை அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு சிறப்பு பூஜை செய்யவேண்டும் என கூறி அழைத்துச் சென்றிருக்கிறார் பாலேஷ். அப்போது கண்முன்னே இருவரும் உறவுகொள்ள வேண்டும் என பாலேஷ் கூறியதாக தெரிகிறது. இதனிடையே, ராகுல் மற்றும் சோனு மீது பசையை ஊற்றிய பாலேஷ் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
வனப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள், பாலேஷ் மற்றும் ராகுலின் செல்போன் ஆகியவற்றை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய உதய்ப்பூர் SP விகாஸ் குமார்,"உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த 50 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்டோரை விசாரணை செய்தோம். அதன் அடிப்படையிலேயே பாலேஷை கைது செய்தோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 3 நாட்கள் விசாரணை காவல் விதிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
இதனிடையே, சோனுவுடன் அடிக்கடி பாலேஷ் போனில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் முக்கோண காதல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read | மீண்டும் திமுக இளைஞரணி செயலாளராக நியமனம்.. நன்றி தெரிவித்து உதயநிதி உருக்கமான ட்வீட்..!